மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மணல்மேடு அரசு சித்த மருத்துவ பிரிவு, மணல்மேடு கால்நடை மருத்துவமனை, மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, துணை வேளாண் விரிவாக்க மையம், குறிச்சி ஊராட்சி புலவனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மல்லியக்கொல்லை கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊர்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். மாணவர்களுடன் கலந்துரையாடி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், குறிச்சி ஊராட்சி புலவனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.65 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்து, பணிகளை ஒப்பந்த கால கெடுவிற்குள் விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து, மல்லியக்கொல்லை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.3 இலட்சம் கடனுதவிகளையும், மத்திய கால கடனாக 1 பயனாளிக்கு ரூ.80 ஆயிரத்து 820 மதிப்பிலான ரோட்டாவெட்டர், 5 பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சத்து 8 ஆயிரத்து 137 மதிப்பீட்டில் பயிர்கடன்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இவ்வாய்வின்போது,
தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா,மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அன்பரசன்;, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி, மணல்மேடு பேரூராட்சி துணைத் தலைவர் சுப்ரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகர், விஜயலெட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments