புதிய கிளை அஞ்சலகத்தை அஞ்சல் துறையின் மத்திய மண்டல தலைவர் நிர்மலா தேவி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அஞ்சல் துறையின் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தில் புதிய கிளை அஞ்சலகம் திறப்பு விழா நடைபெற்றது திருச்சி மண்டலத்தில் 2831 வது கிளையாக திறக்கப்பட்ட நகர் கிளை அஞ்சலகத்தின் திறப்பு விழா உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அஞ்சல் துறையின் திருச்சி மத்திய மண்டல தலைவர் நிர்மலா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளை அஞ்சலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து புதியதாக தொடங்கப்பட்ட அஞ்சலகத்தில் முதல் முறையாக பதிவு அஞ்சல் சேவையை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தொடங்கி வைத்தார் முதல் சேமிப்பு கணக்கை ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி மணிக்கண்ணன் திறந்து வைத்தார்.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கான சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அஞ்சல் துறையின் திருச்சி மத்திய மண்டல தலைவர் நிர்மலா தேவி பேசுகையில் அஞ்சல் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பாக பொதுமக்கள் எத்தகைய வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும் அவர்கள் அஞ்சல் துறையின் மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் பணத்தை செலுத்தும் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை மற்றும் ஊக்க தொகைகள் பெற அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு தொடங்குவது நல்லது என்றும் அதற்கான சேவையை அஞ்சல் துறை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் பேசிய அவர் அஞ்சல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விளக்கமாக பேசினார் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மர சிற்பக் கலைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி உள்ள நிலையில் அதற்கான தபால் தலையையும் விழாவில் வெளியிட்டார்.
No comments