எடுத்துக்கட்டி சாத்தனூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில் எடுத்துக்கட்டி பேருந்து நிலையத்திலிருந்து மாதா கோவில் தெரு வரை உள்ள சாலை சீரமைக்கப்படவில்லை எனக்கூறி சாலையை உடனடியாக சீரமைத்து தர வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பூதனூர் கிளை சார்பில் போராட்டம் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் பவுல் சத்யராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது இதில் நாற்று கட்டுகளை கையில் வைத்துக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் பூதனூர் பிள்ளையார் கோவில் பேருந்து நிலையத்தை உடனே கட்டித் தர வேண்டும் வாழை கொள்ளை தெருவில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கப்பி சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments