Breaking News

ஆம்பூரில் தனியார் விடுதியில் காட்டன் சூதாட்டத்தில் 8 பேர் கைது ரூ1 லட்சம் பறிமுதல்.


ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி செயல்பட்டு வரும் தனியார் விடுதியில்(கிராண்ட் மெரிடியன்) ஆம்பூர், வாணியம்பாடி, தர்மபுரி ஆகிய ஊர்களிலிருந்து சிலர் வருகை தந்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவலின் பேரில் தனியார் விடுதியில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது விடுதியில்  தனி அறை எடுத்து இரவு பகலாக காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்த செல்வா, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி, சலாவுதீன் நகர் பகுதியை சேர்ந்த முபாரக், வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியை சேர்ந்த வேந்தன் , லட்சுமணன், தபீஷா, சசிகுமார் மற்றும் தர்மபுரி பென்னாகரம் பகுதியை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீசார் 1 லட்சம் ரோக்கத்தை பறிமுதல் செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

No comments

Copying is disabled on this page!