Breaking News

தூத்துக்குடி மாநகராட்சியில் 3 ஆண்டுகளில் சாலை, கால்வாய் வசதிகள் 80 சதவீதம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது: மேயர் ஜெகன் பெரியசாமி..

 


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 80 சதவீதம் சாலை மற்றும் கால்வாய் வசதி பாராபட்சமின்றி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லயன்ஸ் டவுண் பகுதி மக்கள், தங்கள் பகுதியில் வடிகால் வசதி மற்றும் நியாய விலை கடையினை புனரமைப்பு செய்து தரகோரிக்கை விடுத்திருநந்தனர். இதனையடுத்து அந்த பகுதிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கிருஷ்ணராஜபுரம் வட்டக்கோவில் ரவுண்டானா மற்றும் செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை நீர் வெளியேற்றும் நிலையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும், மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எந்த மக்கள் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டு காலத்தில் புதிதாக 80 சதவீதம் சாலை மற்றும் கால்வாய் வசதி உள்ளிட்டவைகள் பாராபட்சமின்றி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. புதிய பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் எண்ணங்களுக்கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு அதை ஓன்றன்பின் ஓன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் எந்த பகுதியிலும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில பகுதிகளில் காலி மணைகளில் தண்ணீர் தேங்குவதால் அப்பகுதி பாதிக்கப்படுகிறது. அதையும் முறைப்படுத்தி மின்மோட்டார்கள் மூலம் கடலுக்கு கொண்டு செல்லும் வகையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதராத்தை பேணி பாதுகாக்கும் வகையில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. அனைத்திற்கும் பொதுமக்களின் ஓத்துழைப்பும் அவசியம் தேவை என்பதை உணர்ந்து பொதுமக்களோடு இணைந்து பணியாற்றுகிறோம் என்றார்.

ஆய்வின்போது, வட்ட செயலாளர் ரவீந்திரன், வட்ட பிரதிநிதி புஷ்பராஜ், மாநகர சுற்றுசூழல் அணி தலைவர் வினோத், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!