1 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடிய 5 பேர் கைது திருடு போன இரும்பு பொருட்களை பறிமுதல்..?
புதுச்சேரி கூட்டுறவு துறைக்கு சொந்தமான திருபுவனை கூட்டுறவு நூற்பாலை கடந்த 6 ஆண்டு காலமாக உற்பத்தி இல்லாமல் மூடி கிடக்கின்றது. இந்த தொழிற்சாலையின் உள்ளே கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இந்த நூற்பாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் தொழிற்சாலையின் பின்பக்கமாக கதவுகள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அங்கு பணியில் இருந்த 2 காவலாளிகள் ஓடிச் சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு இரும்பு தகடுகள் திருட்டு போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். அதனைத் தொடர்ந்து நூற்பாலையின் உற்பத்தி பிரிவு அதிகாரி பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில்
திருபுவனை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமாரவேலு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவண்டார்கோவில் பஸ் நிறுத்தம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். அப்பொழுது ரோந்து பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் குமரவேலு மற்றும் குற்றவியல் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் வைத்திருந்த இரும்பு பொருட்களை பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி இரும்பு பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் மேலும் மூன்று பேருடன் சேர்ந்து இரும்பு பொருட்களை திருடி திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
பிரகாஷ 36, உத்ரா 30, தமிழ்மாறன் 42, சூர்யா 32, மணிகண்டன் 26, ஆகிய ஐந்து குற்றவாளிகளை கையும் காலவுமாக பிடித்து புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தார்கள்.
இதேபோல் கடந்த ஆண்டு இந்த நூற்பாலை யில் 12-க்கும் மேற்பட்ட மோட்டார்கள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
No comments