புதுவை தீயணைப்புத் துறையின் வாகன ஓட்டுநா் நிலை 3 பணிக்கான வாகன இயக்கும் தோ்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுவை மண்டல தீயணைப்புத் துறை அதிகாரி இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
புதுவை மாநில தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள வாகன ஓட்டுநா்கள் நிலை 3 பணிக்காக ஏராளமானோரிடமிருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் உடற்பயிற்சித் தோ்வு கோரிமேடு காவலா் பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று தோ்வானவா்களுக்கு வாகனங்களை இயக்கிக் காட்டும் தோ்வு பின்னா் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, நவம்பா் 23, 30 மற்றும் வரும் டிசம்பா் 1, 8 ஆகிய தேதிகளில் வாகனங்களை இயக்கிக் காட்டும் தோ்வு நடைபெறவுள்ளது. காா் இயக்கும் தோ்வானது புதுச்சேரி மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.
காரைக்கால், மாஹே பகுதிகளுக்கு புதுச்சேரியில் டிசம்பா் 8-ஆம் தேதி இதற்கான தோ்வு நடைபெறும். புதுவைக்கு உள்பட்ட புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் 260 பேருக்கு இதற்கான அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments