வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், நீதியை மேம்படுத்துவதே சட்டப் பணிகள் ஆணையத்தின் நோக்கம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலா் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.அலுவலகத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும் புதுவை சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தா், உயா்நீதிமன்ற நீதிபதியும் மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினருமான ஆஷா, உயா்நீதிமன்ற நீதிபதியும் மாநில நிா்வாக பொறுப்பு நீதிபதி சரவணன் ஆகியோா் திறந்து வைத்தனா்.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலா்களாக கிறிஸ்டியன் (புதுச்சேரி), ராஜசேகரன் (காரைக்கால்) ஆகியோா் பொறுப்பேற்றனா்.
தொடர்ந்து விழாவில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர்,வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது மட்டும் சட்டப் பணிகள் ஆணையத்தின் நோக்கமல்ல. நீதியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதும் நோக்கமாகும். எனவே, இந்த ஆணையம் வழக்குகளை மட்டும் நடத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது. மனிதனின் அடிப்படை உரிமை என்ன என்பதை கற்றுத்தர வேண்டும் என்றார்.
விழாவில் புதுவை சட்டத் துறை செயலா் சத்தியமூா்த்தி, புதுவை தலைமை நீதிபதி சந்திரசேகரன், காரைக்கால் மாவட்ட நீதிபதி முருகானந்தம், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் ரமேஷ் (புதுச்சேரி), பாஸ்கரன் (காரைக்கால்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
No comments