தூத்துக்குடியில் பொதுவிநியோக திட்ட சிறப்பு முகாம்: தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது!
தூத்துக்குடி தாலுகா அலுவலத்தில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாமில் சிவில் சப்ளை தாசில்தார் ஞானராஜ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் உள்ளிட்டவை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் சிவில் சப்ளை தாசில்தார் ஞானராஜிடம் வழங்கினர்.
இதில், பெரும்பாலான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் உள்ளிட்டவையும் முகாமிலேயே செய்து கொடுக்கப்பட்டது. முகாமில், தனி வருவாய் ஆய்வாளர்கள் முகேஷ், மகாராஜன், சதீஷ், சந்தனராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments