Breaking News

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல்வேறு பணிகளை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!.


ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட குமாரகிரி, நடுக்கூட்டுடன்காடு, தெற்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிட பணி, குமாரகிரி ஊராட்சி, புதுக்கோட்டை விநாயகர் கோவில் அருகில் ரூ.6 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டிட பணி மற்றும் நடுக்கூட்டுடன்காடு ஊராட்சி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான பணி ஆகியவற்றை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில், ஊராட்சி உதவி இயக்குநர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட்ராஜா, பொறியாளர் ரவி, தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், சிறுபான்மை அணித் தலைவர் ராஜா ஸ்டாலின், ஊராட்சிமன்ற தலைவர்கள் மாங்கனி, ஜாக்சன் துரைமணி மற்றும் கப்பிக்குளம் பாபு உள்பட பலர் பங்கேற்றனர். 

No comments

Copying is disabled on this page!