கவர்னரை வாழ்த்தியும், பாராட்டியும் புதுச்சேரி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் நேரடியாக தொடர்பில் உள்ள கைலாஷ்நாதன் புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசில் செல்வாக்கு மிக்கவர் என்பதால், ஆட்சியாளர்களிடம் அச்ச உணர்வு இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக, தனது செல்வாக்கை புதுவை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் உதவும்படி கவர்னர் கைலாஷ்நாதன் செயல்பாடு அமைந்துள்ளது.
மீண்டும் வழங்கவே முடியாது என்ற நிலையில் இருந்த இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசிடம் பேசி, கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் பெற்று தந்துள்ளார். அதேபோல தீபாவளி பண்டிகைக்கு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை, பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரமாக சம்பளம் உயர்வு, அரசின் காலி பணியிடங்களை நிரப்ப ஆக்ஷன் பிளான், புதிய சட்டசபை வளாகம் என அமைதியான முறையில் கவர்னரின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.
இது புதுவை ஆட்சியாளர்களிடையும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரவேற்பை வெளிப்படுத்தும்விதமாக கவர்னர் கைலாஷ்நாதனை வாழ்த்தியும், பாராட்டியும் புதுச்சேரி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தங்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்திய புதுச்சேரி கவர்னர்கள் சேத்திலால், சந்திராவதி, மல்கானி ஆகியோர் புதுச்சேரி மக்களின் அன்பை பெற்றவர்கள்.அவர்கள் வரிசையில் கவர்னர் கைலாஷ்நாதனும் இடம்பெறும் வாய்ப்பு உருவாகி வருகிறது.
No comments