துய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பெத்தகல்லுப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் தே. மோகன்ராஜ், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினருமான ஸ்ரீஜனனி மோகன்ராஜ் அவர்கள் இல்லத்தில் இன்று காலை 10 மணியளவில் பெத்தகல்லுப்பள்ளி, நெக்குந்தி, கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பம், சின்ன மோட்டூர் ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் 25 தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தீபாவளி பரிசாக புடவை, இனிப்பு, மற்றும் பணம், ஆகியவைகளை வழங்கி கொண்டாடினார்கள்.
உடன் ஒன்றிய குழு உறுப்பினர் ஸ்ரீ ஸ்ரீஜனனி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும் 5 ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்களை கௌரப்படுத்திய தே.மோகன்ராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
No comments