Breaking News

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் 332 கோரிக்கை மனுக்களை பெற்றார்.


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்  இ. ஆ. ப. தலைமையில் நடைபெற்றது மக்கள் குறை தீர்வு நாள்  கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து நிலப்பட்ட மாறுதல் இலவச வீட்டு மனை பட்டா முதியோர் உதவித்தொகை வேளாண்மை துறை நகராட்சி நிர்வாகங்கள் பேரூராட்சித் துறை கூட்டுறவு கடனுதவி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி மின்சாரத்துறை சார்பான குறைகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மருத்துவத்துறை கிராம பொது பிரச்சனைகள் குடிநீர் வசதி வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 332 மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார். 

பின்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தர்விட்டார் இன்று நடைபெற்ற குறைத்திருநாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் நல வாரியத்தின் மூலம் இயற்கை மரணம் அடைந்த 10 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை தலா  ரூ. 17.000 வீதம்  ரூ. 1.70.000 மதிப்பில் ஆன காசோலையை வழங்கினார். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  த. மாலதி வருவாய் அலுவலர்( நில எடுப்பு) ராஜ்குமார் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நீ. செந்தில்குமார் மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன் தனித்துறை ஆட்சியர் (சா. பா. தி. கலியமூர்த்தி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமா வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.

No comments

Copying is disabled on this page!