விமான போக்குவரத்து துறையில் சாதனை: தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு.
விமானப் போக்குவரத்து துறையில் சாதனை புரிந்த-தூத்துக்குடி விமான நிலைய போக்குவரத்து துறை அதிகாரிக்கு ராஜலட்சுமிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்தார். இந்திய விமானப் போக்குவரத்து துறையில் சாதனை படைத்த 50 பெண்களில் ஒருவராக தூத்துக்குடி விமான நிலைய போக்குவரத்து துறை கட்டுப்பாடு மேலாளர் ராஜலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட 50 பேர் குழுவுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் கலந்துரையாடினார். மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நோக்கில் மக்களுடன் ஜனாதிபதி என்ற முயற்சியின் கீழ் இந்த சந்திப்பு இடம்பெற்றது. அப்போது பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு செயல்பாடு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களில் 15 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர்.
விமானத்தை அனுப்புபவர்களில் 11 சதவீதம் பேர் பெண்கள், விண்வெளி பொறியாளர்களில் 9 சதவீதம் பேர் பெண்கள், கடந்த ஆண்டு வர்த்தக உரிமம் பெற்ற விமானிகளில் 18 வீதமானவர்கள் பெண்கள் பங்காற்றி வருகின்றனர் என குடியரசு தலைவர் பாராட்டு தெரிவித்தார். பின்னர், 50 பேருக்கும் விருந்து அளித்து கௌரவித்தார்.
No comments