பள்ளி குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் சொல்லித் தர ஆசிரியர்களுக்கு ஆடல் மற்றும் பாடலுடன் பயிற்சி அளிக்கப்பட்டது:-
தமிழ்நாட்டில் கொரோனா பொது முடக்க காலத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு, அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் கற்பிப்பதற்காக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் முதல் பருவ பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு
மயிலாடுதுறையில் தொடக்க கல்வித்துறை சார்பில், தருமபுரம் குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர் மேற்பார்வையாளர் முருகேசன் பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் நடனத்துடன் பாட்டு பாடி பாடம் நடத்தியது ஆசிரியர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பயிற்சி வகுப்பில் 200 ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
No comments