சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவளித்த திருமணமான இளைஞர் மீது போக்சோ வழக்கு..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் வினோராஜ் (வயது 33). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி 3 வயதில் 1 மகன் உள்ளார். வினோராஜ் ஊர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி ஒருவரிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். வீட்டுக்குள் சென்றவுடன் வினோராஜ் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்ததை சேர்ந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் வினோராஜ்’ வீட்டில் இருந்து சிறுமி அழுது கொண்டே ஓடி வெளியே வந்துள்ளார். சிறுமியிடம் அவரது குடும்பத்தினர் ஏன் அழுகிறாய் என்று கேட்டுள்ளனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி, காவல் உதவி ஆய்வாளர் சுபஶ்ரீ ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் வினோராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments