மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் தொடர்பான முகாம் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் தொடர்பான முகாம் நடைபெற்று வருகிறது நேற்று முதல் நாளில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து பயனடைந்தனர் இன்று இரண்டாவது நாளாக காலை முதலே பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்ப்பது திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காத்திருந்தனர் சில இடங்களில் மழை காரணமாக முகாம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது இருப்பினும் பல்வேறு இடங்களில் முகாம் தொடங்கிய உடனேயே பொதுமக்கள் ஆர்வத்துடன் தேவையான ஆவணங்களை கொண்டு வந்து புதிய வாக்காளர் சேர்ப்பு முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் தொடர்பாக பயனடைந்தனர் நேற்று நடைபெற்ற முகாம்களில் சில இடங்களில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பொதுமக்களுக்கு முகாமில் சிரமமின்றி பயன்பெற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் பல இடங்களில் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாமிற்கு வந்து பயனடைந்தனர்.
No comments