தூத்துக்குடியில் கலைஞர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை பயனாளிகளுக்கு மேயர் ஜெகன் பெரியாசமி வழங்கினார்.
தூத்துக்குடியில் கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை மேயர் ஜெகன் பெரியசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை ஏழைஎளிய மக்கள் கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.
ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 1.37 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தில் 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டத்தின் மூலம் உலகத்தரத்தில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தேவர் காலனியில் பயனாளிகளுக்கு புதிய கலைஞர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மாநகராட்சி பணிக்குழு தலைவரும், மாநகர திமுக துணைச்செயலாளருமான கீதா முருகேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்த கொண்டு பயனாளிகளுக்கு கலைஞர் காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டையை வழங்கினார்.
விழாவில், வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments