Breaking News

புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக காரைக்கால் மகளிர் மாநாடு -2024 நிகழ்ச்சி ஆளுநர் துவக்கி வைத்தார்.

 


புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக காரைக்கால் மகளிர் மாநாடு -2024 நிகழ்ச்சி காரைக்கால் திருவேட்டக்குடி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் K.கைலாசநாதன் முன்னிலையில் புதுச்சேரி சபாநாயகர் R.செல்வம், வேளாண் துறை அமைச்சர் C.ஜெயக்குமார், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் PRN_திருமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் AK.சாய் சரவணகுமார், சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன்,காரைக்கால் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.D.மணிகண்டன் மற்றும் புதுச்சேரி டிஜிபி அரசு அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி காரைக்கால் மகளிர் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் கடல்பாசி வளர்ப்பு, சுய உதவிக் குழுகளுக்கு நிதி உதவி, மகளிர்களுக்கான பிங்க் ஆட்டோ ( PINK AUTO) துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு நமோ டிரோன் (NAMO DRONE) ஆகியவற்றை துணை ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து உலக மீனவர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் அரசலாற்றில் படகு போட்டியை ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

No comments

Copying is disabled on this page!