சீர்காழியிலிருந்து சென்னைக்கு புதிய பேருந்தை சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்..பயணிகள் மகிழ்ச்சி..
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் சீர்காழியில் இருந்து சென்னைக்கு புதிய அரசு பஸ் இயக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன், சீர்காழி நகராட்சி ஆணையர் மஞ்சுளா, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை துணை தலைவரும் பாண்டியன், மத்திய சங்க பொருளாளர் திருவரசு மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கிளை மேலாளர் செல்வகணபதி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம் எல் ஏ சீர்காழியில் இருந்து சென்னை செல்லும் புதிய பஸ்சை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசுகையில்..., தமிழக முதல்வர் பொறுப்பேற்று எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் .இந்த திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் சீர்காழியில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் தேவையான அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தால் பரிசீலனை செய்து புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் பொதுமேலாளர் ராஜி, சிதம்பரம் கிளை மேலாளர் கபிலன், திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் பிரபாகரன், பஞ்சுகுமார், மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் வீரமணி, சீர்காழி சங்கத் தலைவர் சின்னத்துரை, செயலாளர் அபூபக்கர் சித்திக், பொருளாளர் பாலாஜி, சீர்காழி திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் மற்றும் சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் நடத்துனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments