உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி என்பவர் மீது நடைபெற்ற கத்தி குத்து சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்கள் சங்கம் கூட்டமைப்பு மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மருத்துவமனை பகுதியில் புற காவல் நிலையம் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் காவலர்கள் பணி அமர்த்த வேண்டும், தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது தாக்கப்படும் சம்பவத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments