மயிலாடுதுறை, அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவை மட்டும் புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம். நோயாளிகள் அவதி.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறை, சீர்காழியில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்காமல் பணி புறக்கணிப்பு செய்துள்ளனர். மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க கோரியும், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரியும் புற நோயாளிகள சிகிச்சை பணிகளை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வந்த நோயாளிகள் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் கடும் அவதி அடைந்தனர். புற நோயாளிகள் சிகிச்சைக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள் பணி புறக்கணிப்பால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்திய மருத்துவர் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments