10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதனால், படகு குழாமிற்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.
கடலுார் சாலையில் நோணாங்குப்பம் படகு குழாம் இயங்கி வருகிறது. இங்கு தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையால், படகு குழாமில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு நாட்களில், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நேற்று காலையில், இருந்து, சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.இரு நாட்களில், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதன் மூலம் படகு குழாமிற்கு 25 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்தது.
படகு குழாமில், போதிய படகுகள் இல்லாமல் இருக்கிறது. இதனால், படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, நோணாங்குப்பம் படகு குழாமில் கூடுதல் படகுகள் இயக்கவும், உள் மற்றும் வெளிப்புற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்துள்ளது.
No comments