புதுச்சேரியில் உள்ள போலி கால் சென்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைம் போலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்..
புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
புதுச்சேரி அரசின் தொழில் வணிக துறை பதிவேடுகளில் பதிவு பெற்ற கால் சென்டர்கள் 4 மட்டுமே உள்ளன. ஆனால் புதுச்சேரியில் ஏராளமான போலி கால் சென்டர்கள் அரசின் அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்கி வருவதாக எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே கால்சென்டர், பி.பி.ஓ.,க்களை முழுவதுமாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம்.
இந்த போலி கால் சென்டர்கள் மூலம் பொது மக்களை தொடர்பு கொண்டு சில தனியார் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர்களை கூறி லோன் பெற்று தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி இன்சூரன்ஸ் காப்பீடு போட வைத்து ஏமாற்றுகின்றனர்.
இல்லையெனில், போலி கால் சென்டர்கள் மூலம் சில ட்ரஸ்ட் பெயர்களை கூறி நன்கொடை வசூல் செய்து பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது தவிர, போலி கால் சென்டர்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் திருமண வரன் பார்க்கும் தகவல் மையமாக செயல்பட்டு பொது மக்களை ஏமாற்றி வருகின்றன.
எனவே தான் புதுச்சேரியில் உள்ள போலி கால் சென்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருவதாக கூறினர்.
No comments