திருக்காஞ்சி ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சி பகுதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி மீனாட்சி உடனூறை ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் சன்னதி கொண்டிருக்கும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதரின் கந்த சஷ்டி சூரசம்கார விழா நேற்று மாலை துவங்கியது இதில் மாலை இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீ துண்டி விநாயகர் மற்றும் முருகப்பெருமானுக்கு பால் இளநீர் தயிர் சந்தனம் பன்னீர் பழச்சாறுகளுடன் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று மகாதீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவின் முக்கிய விழாவான சூரசம்ஹார விழா எதிர்வரும் வியாழக்கிழமை அன்று நடைபெறவிருக்கிறது இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை உபயதாரர் மோகன் குடும்பத்தினர் மற்றும் ஆலய நிர்வாக குழுவினர் கிராமவாசிகள் இணைந்து செய்திருந்தனர்.
No comments