ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்து 155வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 155வது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் பால என்ற பாலசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியின் முன்னாள் நகர்மன்ற தலைவரான ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்து, அன்றைய காலகட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சத்தால் நகர மக்கள் அவதிக்குள்ளாகியிருந்த போது, தொலைநோக்கு சிந்தனையுடன் தனது சொந்த செலவில் வல்லநாடு பகுதியில் இருந்து தூத்துக்குடி நகருக்கு குழாய் பதித்து நகர மக்களின் தாகம் தீர்த்தவர். இதனால் குடிநீர் தந்த கோமான் என தூத்துக்குடி மக்களால் அழைக்கப்பட்டவர்.
ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்தின் 155 ஆவது பிறந்தநாளையொட்டி, ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் பால என்ற பாலசுப்பிரமணியன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
No comments