திருநாவலூரில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான மனோன்மணி அம்பாள் சமேத பக்தஜனேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூரில் சுமார் 2000 ஆண்டுகள் மிகவும் பழமையான மனோன்மணி அம்பாள் சமேத பக்தஜனேஸ்வரர் திருக்கோயிலில்21 ஆண்டுகளுக்குப் பிறகுகோயில் புனரமைப்பு பணிகள்நடைபெற்று முடிந்த நிலையில்கடந்தநவம்பர் 19ஆம் தேதி அன்று கோயில் முன்பாக யாகசாலை அமைக்கப்பட்டு யாக சாலை பூஜை தொடங்கியது.தொடர்ந்து பல்வேறு விதமான பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை கடன் புறப்பாடு நடைபெற்று தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது இந்த மகா கும்பாபிஷேக விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் பக்தர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
No comments