தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்ததை ஒட்டி மீண்டும் பொதுமக்கள் ஊருக்கு திரும்புவதால் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பும் மக்களால் ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது, சென்னை, கோவை திருச்சி, மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், அதிக கூட்டத்தினால் பொதுமக்கள் காத்திருந்த பேருந்தில் ஏறி பயணம் செய்கின்ற சூழலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பேருந்து நிலையத்தின் கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர ஈரோடு போக்குவரத்து காவல்துறையினர் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களே பேருந்து நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிக்காமல் திரும்பி அனுப்புகின்றனர், பொதுமக்களின் கூட்டமானது பேருந்து நிலையத்தில் அதிகரித்து காணப்பட்டு வருவதால் அங்கு பரபரப்பு சூழ்நிலை நிலவி வருகிறது.
No comments