சீர்காழியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் ரூ. 8 கோடியே 42 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியை சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் காந்தி ராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி , சட்டமன்ற குழு உறுப்பினர் ராம. கருமாணிக்கம், சதன். திருமலைக்குமார், சுதர்சனம், ஓ.எஸ்.மணியன், ராஜா, வெங்கடேசன், நிவேதா. முருகன், பன்னீர் செல்வம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து நாகை -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணிகளை சுரக்காடு பகுதியில் குழுவினர் ஆய்வு செய்தனர் பின்னர் திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பாக ரூபாய் இரண்டு கோடி மதிப்பீட்டில் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேக பணியானது நடைபெற்று வருகிறது இதைப் பார்வையிட்டனர் பின்னர் சுற்றுலாத்துறை சார்பாக பூம்புகாரில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
No comments