Breaking News

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த முகாமினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு..

 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் டி.பி.டி.ஆர் தொடக்கப்பள்ளி, மயிலாடுதுறை குரூமூர்த்தி நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த முகாமினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்டஆட்சியர் மகாபாரதி தெரிவித்தது.  

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பான முகாம்கள் 160.சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288வாக்குச்சாவடிகளும், 161.மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், 162.பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச் சாவடிகளிலும் நேற்று (16.11.2024) நடைபெற்றது. அதேபோன்று இன்று (17.11.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.மேலும் வருகின்ற 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்நாட்களில் தகுதியான வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பெயரினை எவ்வித விடுபாடுமின்றி பட்டியலில் சேர்த்திட ஏதுவாக படிவம் 6 விண்ணப்பம் அளித்திடவும், இறந்துபோன வாக்காளர்களை நீக்கம் செய்திட படிவம் 7-இல் விண்ணப்பித்தும், வேறுவாக்குச் சாவடிகளுக்கோ, வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கோ அல்லது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றில் திருத்தம் செய்திட படிவம் 8-இல் விண்ணப்பித்தும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.இவ்வாய்வின்போது, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.


 -செய்தி மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இ. பாலமுருகன்

No comments

Copying is disabled on this page!