Breaking News

உளுந்தூர்பேட்டை அருள்மிகு மிளகு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்.


உளுந்தூர்பேட்டையில் உள்ள அருள்மிகு மிளகு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது, இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கோஷம் வழங்க அம்மனை வழிபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஈசன் உளுந்தை மிளகாக்கிய தல பெருமை வாய்ந்த உளுந்தையம்பதி என்று போற்றப்படும் உளுந்தூர்பேட்டை நகரில் ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலயத்திற்கு அருகில் அருள் பாலித்து வரும் அருள்மிகு மிளகு மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு பஞ்சவர்ணம் தீட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தை நேற்று முன்தினம் புதன்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி, மகாலட்சுமி ஹோமமும், நடைபெற்றது தொடர்ந்து புற்று மண் எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்த பின்பு நேற்று வியாழக்கிழமை யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து 3-ம் நாளான இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை யாகசாலை பூஜை நடந்தது தொடர்ந்து சுவாமிக்கு ரக்ஷாபந்தனம், பூர்ணாஹூதி தீபாராதனையும் செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

அப்போது யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்து துணிந்து ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர் தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள அருள்மிகு மிளகு மாரியம்மன்க்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர் தொடர்ந்து மகா தீபாராதையும் நடைபெற்றது.

அப்போது கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சக்தி கோஷம் வழங்க அம்மனை வழிபட்டனர் இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!