ஆவின் பால் விலை உயர்த்தும் திட்டம் எதுவுமில்லை என்றும் அமுல் ஆவினுக்கு போட்டியாளர் கிடையாது என ஈரோட்டில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
தமிழக பால்வளத்துறை ராஜகண்ணப்பன் ஈரோட்டிலுள்ள கால்நடை தீவன தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். கால்நடை தீவன உற்பத்தி முறை, தரம் மற்றும் உற்பத்தி அளவுகளை அதிகாரிகளிடம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழகம் முழுவதும் 24 பால் பன்னீர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய்து, கோவையில் முதல் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தீபாவளிக்கு ஆவின் இனிப்புகள் 20 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளதாகவும், ஆவின் பாலை கள்ள மார்க்கெட்டில் விற்பதை ஒழித்துள்ளதாகவும் தெரிவித்த ராஜகண்ணப்பன், ஆவின் பால் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும், 143 கோடி ரூபாய் பால் ஊக்கத்தொகை வழங்கியுள்ளதாகஙுமர, பாலுக்கான கொள்முதல் விலை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தனியார் பால் விலை ஆவின் பாலை விட 12 ரூபாய் அதிகமாக விற்பகப்படுவதாகவும், அமுல் ஆவினுக்கு போட்டியாளர் கிடையாது என்றார். திமுக தாய் கட்சி என்றும் அதிமுகவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பிறகு மற்றவர்களை தலைவராக பார்ப்பதில்லை என்றார்.
No comments