Breaking News

வில்லியனூர் பெருமாள்புரத்தில் ரூ. 33 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.

 


வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட வில்லியனூர், பெருமாள்புரம் – குறுக்குத் தெருக்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூபாய். 32 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் பக்கவாட்டு கழிநீர் வாய்க்கால் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!