புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் முதலாம் ஆண்டு நினைவு நாள் துணை சபாநாயகர் ராஜவேலு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் மலரஞ்சலி..
புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான ப.கண்ணன் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார் அவர் மறைந்து ஓராண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.
ப.கண்ணனின் மகன் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கண்ணனின் குடும்பத்தார்கள் நினைவஞ்சலி செலுத்தினார்கள் இதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கண்ணனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத் செந்தில்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணனின் ஆதரவாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று கண்ணனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments