Breaking News

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


ஈரோடு ஒளிரும் பவுண்டேஷன் சார்பில் தற்போது உள்ள காலவெப்ப சூழ்நிலையை கருதி ஈரோடு மாவட்டம் முழுவதும் மரங்கள் வளர்க்க திட்டமிட்டு "விதை சிறிது, விடை பெரிது" என்ற தாரக மந்திரத்துடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவிகள் மூலம் மரக்கன்றுகளை கொடுத்து ஒவ்வொருவர் வீட்டின் முன்பும், விவசாய நிலங்களிலும் மரம் நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

இது குறித்து ஈரோடு ஒளிரும் பவுண்டேஷன் எஸ். சின்னசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மரம் வளர்ப்பு அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு  தேவையான மரக்கன்றுகளை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மரம் வளர்ப்ப பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில்  மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் அதிக மரங்களை வளர்க்கும் அரசு பள்ளிகளில் சுமார் 10 பள்ளிகளை தேர்வு செய்து அந்தப் பள்ளிகளுக்கு தேவையான கட்டிட வசதி மற்றும் கழிப்பிட வசதி ஆகியவற்றை  செய்து தர உள்ளோம்.

மேலும் மரம் வளர்ப்பு பற்றி போட்டோ மூலம் தெரிவித்து வரும் பள்ளி குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கியும் அவர்களை ஊக்கப்படுத்த உள்ளோம். இந்த மரம் வளர்ப்பு பற்றிய அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அனைவரும் திட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பாதாம் மரம், இலுப்பை மரம், கொய்யா மரம், கோனை புளியங்கா மரம், குமிழ் தேக்கு, மாமரம், மா மரம், மகாகனி மரம், மலைவேம்பு மரம், மூங்கில் மரம், நாவல் மரம், நிர்மருது மரம், நெல்லி மரம், பலாமரம், பூவரசன் மரம், புளியமரம், புங்கமரம், செம்மரம், ஈட்டி மரம், சில்வர் ஓக், சொர்க்க மரம், தேக்கு மரம், வாகை மரம், வேம்பு மரம், வேங்கை மரம் ஆகிய மரக்கன்றுகளை இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படுபவர்கள் எவ்வளவு மரக்கன்றுகள் வேண்டுமானாலும் வாங்கி செல்லலாம், இவ்வாறு அவர் கூறினார். 

இதனையொட்டி இன்று ஈரோடு மாவட்டம் அரச்சலூர் உள்ள அகஸ்திய பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் சுற்றுச்சூழல் துறை பொறுப்பாளர் சிக்மா தர்மராஜ், அகஸ்தியா பள்ளி தாளாளர் வித்தியா செந்தில், முதல்வர் சத்யா, மற்றும் கண்ணன், ஜவஹர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!