புதுச்சேரி அருகே கார் உதிரி பாகங்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேதாரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் சேதராப்பட்டு நான்கு முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புதுச்சேரியில் இருந்து சேதாரப்பட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையுடன் வந்த இருவரை போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் சேதராப்பட்டு பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் 25, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ் 24, என்பதும், அவர்கள் எடுத்து வந்த சாக்கு மூட்டையில் 10 காருக்கான அலுமினியம் உதிரி பாகங்கள் இருந்தது தெரியவந்தது.இந்த உதிரிபாகங்களை புதுச்சேரியில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் கம்பெனியில் திருடி வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த கார் உதிரிபாகங்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments