வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பழவேற்காடு கடற்கரை பகுதியில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பழவேற்காடு சுற்றுப்பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
பழவேற்காடு அருகே கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோரைக்குப்பம் மீனவ கிராம மக்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடலை ஒட்டி மிக அருகில் அமைந்துள்ள கோரைக்குப்பம் மீனவ மக்கள் கரையில் நிறுத்தி வைத்துள்ள படகுகளை ட்ராக்டர்களை வாடகைக்கு வரவழைத்து அதில் கட்டி படகுகளை மேடான பகுதியில் நிறுத்தி பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments