குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவியுடன் காசோலையை வழங்கிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் .....
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவாலி ஊராட்சி பகுதியில் ரூ.18.90 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தி மற்றும் சேமிப்பு மையம் கட்டுமான பணி நடைபெற்று முடிந்த நிலையில் பிற்படுத்த பட்டோர்நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சட்டமன்ற உறுப்பினர்கள் பூம்புகார் நிவேதா எம். முருகன், சீர்காழி எம். பன்னீர்செல்வம், மயிலாடுதுறை ராஜ்குமார் ,உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்ததுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிதி உதவி அளித்து இருந்த நிலையில் தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று பெற்றோர்களிடம் வழங்கினார், வானகிரியை சேர்ந்த மீனவர் படகு இலங்கை கடற்பறையால் சிறைபிடிக்கப்பட்டு பழுதானதால் அவருக்கு 6 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments