புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு சாலையோர ஓட்டலில் வாலிபரை தாக்கிவிட்டு காரில் தப்பி செல்லும் சுற்றுலா பயணிகளின் வீடியோ வைரலாகி வருகிறது..
தீபாவளி விடுமுறையை கொண்டாட தமிழகம் உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். அவர்கள் இரவு பகல் என பார்க்காமல் புதுச்சேரி நகரப் பகுதிகளில் சுற்றி வருகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு சாலையோர கடைகளில் கிடைக்கும் உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். அவ் அவ்வாறு சாப்பிடும் போது சில நேரம் உள்ளூர்வாசிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.
நேற்று நள்ளிரவு சுற்றுலாப் பயணிகள் சிலர் அண்ணா சாலையில் உள்ள சாலையோர ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுள்ளனர். அப்போது சாப்பிட வந்த புதுவையை சேர்ந்த வாலிபருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுற்றுலா பயணிகள், அந்த வாலிபரை நூடுல்ஸ் கரண்டியால் சாரமாரியாக தாக்கி விட்டு காரில் தப்பி ஓடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
No comments