தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்ட 71 வது கூட்டுறவு சங்க வார விழா..
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில், 71- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.M.S.பிரசாந்த்,IAS,. தலைமையில்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமன க.கார்த்திகேயன், B.Sc., M.L.A. முன்னிலையில்,
இன்று கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள பாப்பாத்தி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் புதிய
செயல்திறன் மிகு திட்டங்களின் மூலம் கூட்டுறவு சங்கங்களை சிறப்பாக வலுப்படுத்திய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, திராவிட மாடல் அரசின் கூட்டுறவு துறைக்கான சிறப்புத் திட்டங்களை எடுத்துரைத்து, கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, தனது வாழ்த்துக்களை தெரிவித்து, கூட்டுறவுத்துறை சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் இந்த விழாவில், நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர், ஒன்றிய, நகர, பேரூர் பெருந்தலைவர்கள், துணைத் தலைவர்கள், கூட்டுறவுத் துறை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள், அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள்,பயனாளிகள் என ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments