மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி.
மயிலாடுதுறை இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமைமுதல் வியாழக்கிழமைவரை மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் மழை சேதம் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்-1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணுக்கு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 தானியங்கி மழைமானி மையம், 3 தானியங்கி வானிலை மையம் மற்றும் 6 மழைமானி உள்ளது. 19 விஎச்எப்-ஒயர்லாம் செயல்பட்டில் உள்ளது. சாட்டிலைட் போன் தயார் நிலையில் உள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேரமும் பருவமழை காலங்களில் சுழற்சி முறையில் அனைத்து துறை அலுவலர்களை செயல்பட்டு வருகிறது. 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளது. 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 362, திருமண மண்டபம்-146, சமுதாய கூடம்-68 ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை தொடர்பான எச்சரிக்கைகளை அளித்திட 25 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 இடங்கள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்கள்-33, குறைந்த அளவு பாதிக்கக்கூடிய 80, மிக குறைந்த பாதிக்கக்கூடிய இடங்கள் 76 ஆக மொத்தம் 201 பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 4500-க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளார்கள். புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலை ஏற்படுத்திட ஏதுவாக அனைத்து துறைகளிலும் ஜெசிபி 85, ஜெனரேட்டர்கள் 164, பவர் சா 57, ஹிட்டாச்சி 31, ஆயில் என்ஜின்கள் மணல் மூட்டைகள் 40351, மரம் அறுக்கும் கருவிகள்-84, சவுக்கு கம்பங்கள், 34110 பிளிச்சிங் பவுடர் 5870 கிலோ ஆகியன போதிய அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு தங்குமிடம் மற்றும் பராமரிப்புக்குழு ஆகிய குழுக்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் 10 அனைத்து துறை அலுவலர்களைக்கொண்ட தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 வட்டத்திற்கும் துணை ஆட்சியர்கள் தலைமையில் ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித்தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் உள்ளார்கள்.80 தன்னார்வ நீச்சல் நன்கு தெரிந்த நபர்களும் செல்பேசி எண்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்: பருவகால ஆய்வுகள் செய்யப்பட்டு பழுதான மின்கம்பங்களில் 314 மாற்றப்பட்டுள்ளன. மின் பாதையில் இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் கிளைகள் 2219 அகற்றப்பட்டுள்ளது. 5600 மின்கம்பங்கள் இருப்பு உள்ளது. மின்மாற்றிகள்-44 அவசர காலத்திற்கு பயன்படுத்திட இருப்பு உள்ளது.
மேலும், 26.11.2024 மற்றும் 27.11.2024 ஆகிய இருதினங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு விடுத்துள்ளதால் கனமழையும் அதி தீவிர மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மறுஅறிவிப்பு வரும் வரை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் எனவும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திடவும், அனைத்து மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அவசர கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார் அதிகாரிகள் இருந்தனர்.
No comments