சாய் அப்போலோ செவிலியர் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாய் அப்போலோ செவிலியர் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி தலைமையில் 100 கும் மேற்பட்ட பெண்களுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனர் மருத்துவர் தங்கதுரை மற்றும் கல்லூரியின் தாளாளர் அம்பிகா தங்கதுரை அவர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பேசிய ஆய்வாளர் , செவிலியர் துறையில் பெண்கள் சாதித்து வருவதாகவும், சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை தைரியத்தோடு எதிர்கொள்வதாகவும், தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய அவர் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் செயலி பற்றி விளக்கம் அளித்தார், இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலைய காவலர் மேகவள்ளி மற்றும் மனிதம் காப்போம் குழுவின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் செல்வா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார், இவர்களை கல்லூரியின் முதல்வர் ஆனந்த ஜோதி வரவேற்றார்.
No comments