ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்து 155வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
தூத்துக்குடியில் ராவ் குரூஸ்பர்னாந்தின் 155வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் குருஸ்பர்னாந்தின் 155வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் எம்.ஜி.ஆர். பூங்கா அருகில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகராட்சி மண்டலத் தலைவர் அன்னலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வின், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, மெட்டில்டா, பவாணி, ரெக்ஸ்லின், ஜெயசீலி, நாகேஸ்வரி, வைதேகி, கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, கலை இலக்கிய அணி அமைப்பாளர் துறைமுகம் ராமசாமி, தாசில்தார் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் சரவண வேல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments