வாஸ்கோ நிறுவனம் சார்பில் நடைபெற்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை துணை சபாநாயகர் ராஜவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் இயங்கிவரும் வாஸ்கோ நிறுவனம் மற்றும் டெக்கத்லான் உடன் இணைந்து போதைக்கு எதிரான இரண்டாம் ஆண்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடந்தது.இதில் துணை சபாநாயகர் ராஜவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தை துவங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் அனைத்து வயதினர்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாடகர் தெருக்குரல் அறிவு, வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், வாஸ்கோ மற்றும் டெக்கத்லான் நிறுவன ஊழியர்கள் சிறப்பாக செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments