வானூர் அருகே கல்குவாரியில் கை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் குவாரியில் மிதப்பதாக வானூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் வானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு துறை போலீசார் உதவியுடன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நபரை வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு இங்கு வந்து வீசி சென்றனரா அல்லது இங்கேயே வெட்டி தலை கால்கள் கைகளை வேறு இடத்தில் வீசி பட்டுள்ளதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த பெண்ணை கொலை செய்து இந்தப் பகுதியில் வீசி சென்றது குறிப்பிடத்தக்கது.
No comments