தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குழந்தைகள் தின விழா!
தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் எட்டயபுரம் சாலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.
குழந்தைகள் தின விழாவினையொட்டி குழந்தைகள், மாணவ மாணவியருக்கு வண்ணம் தீட்டுதல், கையெழுத்து, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி ஜெயின்ஸ் கிளப் தலைவர் ராஜதுரை தலைமை வகித்து பேசினார். பிளட் ஜெயபால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மகளிர்நல மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ், பொருளாளர் சாந்தி சரவணன், துணை தலைவர் பத்மலதா ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவா அறக்கட்டளை நிறுவனரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற செயலாளர் காமாட்சி முருகன் வரவேற்று பேசினார். மேலும், நிகழ்ச்சியில், அமுதம் அறக்கட்டளை நிறுவனர் அமுதா சீனிவாசன், ஸ்ரீநலம் தரும் விநாயகர் ஆலய தலைவர் நவநீதகிருஷ்ணன், பசுமை உலகம் அறக்கட்டளை நிறுவனர் நிர்மலா பாலு, சமூக சேவகர் ஏஞ்சலின், எஸ்எம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரவீனா, சார்பதிவாளர் (ஓய்வு) குருசாமி, வழக்கறிஞர் விஜய்சுந்தர், ஆசிரியர் மாரியம்மாள், ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இறுதியாக ஆசிரியை தேவி நன்றி கூறினார்.
No comments