புதுக்கோட்டை பி.எஸ்.பெரியநாயகம் பள்ளியில் குழந்தைகள் தின விழா!
புதுக்கோட்டை பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே, புதுக்கோட்டை பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவில், பள்ளி தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் லே செயலாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் முன்னிலை வகித்து பேசினார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பட்டுராஜ், ஜாய்சன் பிரசன்னா, புதுக்கோட்டை அருள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். பள்ளியின் தலைமையாசிரியர் சோப்பார் ஜோதி பால் வரவேற்று பேசினார். கல்வியே அழியா செல்வம் என்ற கருத்ததுடன் நாடகம், மாணவியரின் நடனம், நேரு மாமா என்ற சிறப்புப்பாடல் போன்ற மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. சிலம்பாட்டம், பலகுரல் பேச்சு என மாணவர்கள் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். நிறைவாக மாணவ, மாணவிருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
No comments