அமரன் திரைப்படத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம், படம் வெளியான தியேட்டருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி மயிலாடுதுறையில் தனியார் திரையரங்கில் அமரன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது அந்த திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காவல்துறையினர் தனியார் திரையரங்கில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனை அடுத்து எஸ் டி பி ஐ கட்சியினர் திரையரங்கு உள்ள சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மது ரஃபி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் ரவூப் , மாவட்ட அமைப்பு செயலாளர் ஜியாவுதீன் , பொருளாளர் காதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாசில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷபிக், தொகுதி தலைவர் கலீல், வர்த்தக அணி தலைவர் புர்ஹானுதீன் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர் இதனால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments