திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் 40 வருடங்களுக்கு பிறகு கையில் வைர வேலுடன் கம்பீரமாக காட்சியளித்த ஜெயந்திநாதர். பக்தர்கள் பரவசம்.
கந்த சஷ்டி விழா கடந்த 2 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 7 ஆம் தேதி விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நான்காம் நாளான நேற்றைய தினம் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. அதன்பின்னர் அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினர்.
அதைத் தொடர்ந்து சுவாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. அதைத் தொடர்ந்து சுமார் 40 வருடங்களுக்கு பிறகு ஜெயந்தி நாதருக்கு இரண்டு அடி உயரமுள்ள வைரவேல் சாத்தப்பட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டனர்.
அதைத் தொடர்ந்து சண்முக விலாச மண்டபத்திற்கு ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை தங்கச்சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வருகை தந்தனர். அங்கு தீபாராதனை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001
No comments