உளுந்தூர்பேட்டை அருகே எம்.குன்னத்தூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எம்.குன்னத்தூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. முகாமுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை தாங்கினார் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் துவக்க உரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார் இம்முகாமில் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட 172 பயனாளிகளுக்கு ரூ.57.31 லட்சம் மதிப்பீட்டில் 5 நபர்களுக்கு சக்கர நாற் காலி, 14 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டை 3 பயனாளிகளுக்கு வேளாண் மானிய திட்ட உதவிகள். 20 பேருக்கு குடும்ப அட்டை, 2 பேருக்கு தையல் இயந்திரம், 86 பயனாளிகளுக்கு வீட்டு மனை ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து எம். குன்னத்தூர் மற்றும் சுற் றியுள்ள கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர் தனி வட்டாட்சியர்கள் காதர்அலி, மணிமேகலை.மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி ராஜா, ப்ரியா பாண்டியன், ஒன்றிய கவுன் சிலர் நடையம்மை ஆறுமு கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன். ஊராட்சி மன்ற தலைவர் சிவா மற்றும் நிர்வாகிகள் ராமலிங்கம், தெய்வசிகா மணி, வையாபுரி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், வேளாண்மை துறை மற்றும் மின்வாரியத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments